இன்றும் (19) பல ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று 15 குறுகிய தூர ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
ரயில் சாரதிகள் இரண்டாம் தரத்தில் இருந்து முதலாம் தரமாக பதவி உயர்வு பெறுவதற்கான பரீட்சை இன்று நடைபெறுகின்றது.
இதன் காரணமாக உண்டான ரயில் சாரதிகளின் பற்றாக்குறையால் கடந்த இரு நாட்களாக பல ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டன.
இதேவேளை, இன்று பிற்பகல் 3 மணிக்குப் பின்னர் ரயில் பயணங்களை இரத்துச் செய்வதை மீளப்பெற முடியும் என இலங்கை ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.