இன்றைய தினம்(19.01.2025), பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள், யாழ் மாவட்டத்திலுள்ள பனை சார் தொழில் துறையோடு சம்மந்தப்பட்ட இயந்திரங்களை உருவாக்கும் சிவ கெங்கா இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டார். இதில் பனை அபிவிருத்தி சபை தலைவர் திரு. சகாதேவன் அவர்களும் கலந்து கொண்டார்.
இவ்விஜயத்தில் போது, அமைச்சர் நிறுவனத்தின் தலைவருடன் கலந்துரையாடி, எதிர்காலத்தில் தனது அமைச்சின் கீழ் இவ்வாறான இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்படவிருக்கும் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த சந்திப்பு, பனை சார் உற்பத்தி தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் இத்தகைய நிறுவனங்களின் திறன் மற்றும் வளர்ச்சிக்கான புதிய வழிகளைக் காண்பிக்கும் ஒரு உறுதியான ஆரம்பமாக மாறியுள்ளது.
பிரதி அமைச்சரின் ஊடகப்பிரிவு