2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருது விழாவிற்கான அற்புதமான புதுப்பிப்புகளை அமெரிக்காவில் உள்ள அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் அண்ட் சயின்ஸ் அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பின்படி விழா எதிர்வரும் மார்ச் 2 ஆம் திகதி நடைபெறும்.
கலிபோர்னியாவில் நடந்து வரும் காட்டுத்தீ நெருக்கடிக்கு மத்தியில், லாஸ் ஏஞ்சல்ஸை இந்த கெளரவிக்கும் வகையில் அமையவுள்ளது.
விழா குறித்து அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி பில் கிராமர் மற்றும் தலைவர் ஜேனட் யாங் ஆகியோர் அதன் உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்தில்,
லாஸ் ஏஞ்சல்ஸை கனவுகளின் நகரமாக நாங்கள் கௌரவிப்போம், அதன் அழகு மற்றும் நெகிழ்ச்சி மற்றும் அதன் பங்களிப்பை வெளிப்படுத்துவோம்.
மேலும் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் படைப்பாற்றல் தொலைநோக்கு பார்வையாளர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்வோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரத்தின் வலிமை, படைப்பாற்றல் மற்றும் நீடித்த நம்பிக்கை, அதன் அடையாளத்தை வடிவமைத்துள்ள அம்சங்கள் மற்றும் உலகளாவிய பொழுதுபோக்கில் அதன் முக்கிய பங்கைக் கொண்டாடுவதில் அகாடமியின் உறுதிப்பாட்டை கடிதம் மேலும் வலியுறுத்தியது.
இதற்கிடையில், 2025 ஆஸ்கார் விருதுகள் பரிந்துரைகள் ஜனவரி 23 அன்று மாலை 7 மணிக்கு இலங்கை நேரப்படி அறிவிக்கப்படும்.
இந்த அறிவிப்பு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்படும்.