முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷவை குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெலியத்த பகுதியில் வைத்து இன்று (25) காலை அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
கைது தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்..
கதிர்காமம் பிரதேசத்தில் காணி ஒன்றின் உரிமை தொடர்பில் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.