கடந்தாண்டு இந்தியா முழுவதும் சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் வளர்த்த விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே இளைஞர்களிடையே கஞ்சா பயன்பாடு அதிகரித்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இமாச்சலப் பிரதேச அரசு கஞ்சா செடியை வளர்க்க அனுமதி வழங்கியுள்ளது. அதாவது தொழில், அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நோக்கங்களுக்காக, கட்டுப்பாடுகளுடன் கஞ்சாவை வளர்க்க இமாச்சலப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
காங்க்ரா மாவட்டத்தில் உள்ள தர்மசாலாவில் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும் பொதுமக்களுக்கு இந்த அனுமதி பொருந்தாது என அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


















