தொடர்ச்சியாக யாழ் பல்கலைக்கழகத்தில் பல விதமான பிரச்சனைகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் பக்கச்சார்பற்ற உண்மை தகவல்களுடன் ஆதவன் செய்தி குழாம் – பகுதி – 1
உண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் நடப்பது என்ன?
யாழ் பல்கலைக்கழக போராட்டத்தில் நடந்தது என்ன?
பீடாதிபதி ரகுராம் பதவி விலகியமைக்கான காரணம் என்ன?
மாணவர்கள் எதிர்நோக்கும் உண்மை சம்பவங்களின் தொகுப்பு !
2024 ஆம் ஆண்டு ஜனவரி 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம், பல்வேறு சிக்கல்களையும் அநீதிகளையும் சுட்டிக்காட்டி நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தது.
முதலாவது, பல்கலைக்கழக விதிகளுக்கும் மானிய ஆணைக்குழுவின் சுற்றுநிரூபத்துக்கும் புறம்பாக மேற்கொள்ளப்பட்ட மாணவர்கள் மீதான விசாரணைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இரண்டாவது, மாணவர்களின் போராட்ட உரிமை, கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை உறுதி செய்ய வேண்டும். மூன்றாவது, விரிவுரையாளர்கள் மீதான முறைகேடுகள் மற்றும் அநீதி குறித்த விசாரணைகளை பாரபட்சமின்றி நடத்த வேண்டும். கடைசியாக, மாணவர்களின் கற்றல் சுதந்திரத்தை உறுதி செய்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்க வேண்டும்.
கடந்த 30.05.2024, 04.09.2024, மற்றும் 25.10.2024 ஆகிய திகதிகளில் மூன்று விசாரணைகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டது. விசாரணைகளின் முடிவில் குற்றமற்றவர்கள் என்று உறுதி செய்யப்பட்டும், மேலதிக தண்டனைகளை கோரி பல்கலைக்கழக நிர்வாகம் செயல்பட்டது. இது மாணவர்களின் உரிமைகளுக்கு எதிராக செயல்பட்ட ஒரு செயல்முறையாக திகழ்ந்தது.
இணைந்து இருங்கள் அடுத்த பகுதியில் மேலும் பல விரிவான உண்மை தகவல்களுடன் ஆதவன் செய்தி குழாம் உங்களோடு!