• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பில் 29 சங்கங்கள் அரசாங்கத்துக்கு ஆலோசனை

தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பில் 29 சங்கங்கள் அரசாங்கத்துக்கு ஆலோசனை

Kavipriya S by Kavipriya S
2025/02/01
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை வணிக சபை மற்றும் இலங்கையில் உள்ள அமெரிக்க வர்த்தக சபை உள்ளிட்ட 29 சங்கங்கள் இணைந்து கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பான கூட்டு யோசனைகளை அரசாங்கத்துக்கு முன்மொழிந்துள்ளன.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்மொழிவுகள் மற்றும் எதிர்வரும் 3 முதல் 6 மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்மொழிவுகள் என்பன இவ்வாறு அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, தேங்கியுள்ள கொள்கலன்களை முறையாக விடுவிப்பதற்காக அடுத்த இரண்டு வாரங்களுக்குள் விசேட சோதனை கருவி கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொள்கலன்களுக்கு விரைவில் அனுமதிகளை வழங்குவதற்காக விரைவு அனுமதிக் குழுவை மீண்டும் கூட்ட வேண்டும் என குறித்த 29 சங்கங்களும் யோசனை முன்வைத்துள்ளன.

அதேநேரம், எதிர்வரும் 3 முதல் 6 மாதங்களுக்குள் கொள்கலன் வளாகத்தின் திறனை விரிவுப்படுத்த வேண்டும் எனவும் முன்மொழியப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் உள்ள பயன்படுத்தப்படாத கொள்கலன் வளாகங்களை அடையாளம் கண்டு இட நெருக்கடியை குறைப்பதற்கு அவற்றை பயன்படுத்த வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

அதேநேரம் கொழும்பு துறைமுகத்தின் சகல நடவடிக்கைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும் எனவும் இலங்கை வணிக சபை மற்றும் இலங்கையில் உள்ள அமெரிக்க வர்த்தக சபை உள்ளிட்ட 29 சங்கங்கள் இணைந்து முன்வைத்துள்ள கூட்டு யோசனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொள்கலன்களுக்கான அனுமதி தாமதத்தை தீர்ப்பதற்காக இலங்கை சுங்கம், நேற்று முதல் 4 நாட்களுக்கு துரிதப்படுத்தப்பட்ட கொள்கலன் அனுமதி திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

எதிர்வரும் 2ஆம் திகதிக்குள் தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிப்பதே இதன் நோக்கமாகும்.

இதேவேளை, கொள்கலன் பரிசோதனை நடவடிக்கையில் ஏற்பட்ட தாமதத்துக்கு மத்தியில் தவறான செயல்பாடொன்று இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களில் கட்டாயம் பரிசீலனை செய்யப்பட வேண்டியவை என குறிக்கப்பட்டிருக்கும் 80 சதவீதமான கொள்கலன்கள், அரசாங்கத்திலுள்ள உயர்மட்டத்தினரின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் இடைவிடாது விடுவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடுவிப்புகள் குறித்து சுங்கச் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தரப்புகள் தற்போது கேள்வி எழுப்பி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ள போதிலும் விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் ஆயுதங்கள், தங்கம், போதைப்பொருள் மற்றும் தரக்குறைவான மருந்துகள் இல்லை என அரசாங்கத்தால் எவ்வாறு கூற முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் அதிகரிப்பு

Next Post

வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழப்பு

Related Posts

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

“எல்டோ தர்மே” என்பவரின் வாள் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் 3 பேர் கைது!

2026-01-31
கணவன்மார்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: பாரிய போராட்டம்!
இலங்கை

கணவன்மார்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: பாரிய போராட்டம்!

2026-01-31
கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இலங்கை

திருகோணமலை , முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

2026-01-31
ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு
இலங்கை

பெப்ரவரி 02 முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த GMOA தீர்மானம்!

2026-01-31
காத்தான்குடி பிரதான பஸ் தரிப்பு நிலைய அபிவிருத்தி:ஹிஸ்புல்லாஹ் எம்.பி
கிழக்கு மாகாணம்

காத்தான்குடி பிரதான பஸ் தரிப்பு நிலைய அபிவிருத்தி:ஹிஸ்புல்லாஹ் எம்.பி

2026-01-31
தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பார்வையிடுவதற்கு வருகைதந்த எதிர்க்கட்சித் தலைவர்
இலங்கை

தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பார்வையிடுவதற்கு வருகைதந்த எதிர்க்கட்சித் தலைவர்

2026-01-31
Next Post
வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழப்பு

வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழப்பு

கட்சி நிர்வாகிகள் களத்திற்கு செல்ல தயங்கக் கூடாது – த.வெ.க தலைவர் விஜய்

கட்சி நிர்வாகிகள் களத்திற்கு செல்ல தயங்கக் கூடாது - த.வெ.க தலைவர் விஜய்

மட்டக்களப்பு காத்தான்குடியில் பாரிய தீ விபத்து

மட்டக்களப்பு காத்தான்குடியில் பாரிய தீ விபத்து

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

“எல்டோ தர்மே” என்பவரின் வாள் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் 3 பேர் கைது!

0
கணவன்மார்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: பாரிய போராட்டம்!

கணவன்மார்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: பாரிய போராட்டம்!

0
டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து தனஞ்சய டி சில்வா நீக்கம்

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து தனஞ்சய டி சில்வா நீக்கம்

0
கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

திருகோணமலை , முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

0
ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு

பெப்ரவரி 02 முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த GMOA தீர்மானம்!

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

“எல்டோ தர்மே” என்பவரின் வாள் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் 3 பேர் கைது!

2026-01-31
கணவன்மார்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: பாரிய போராட்டம்!

கணவன்மார்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: பாரிய போராட்டம்!

2026-01-31
டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து தனஞ்சய டி சில்வா நீக்கம்

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து தனஞ்சய டி சில்வா நீக்கம்

2026-01-31
கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

திருகோணமலை , முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

2026-01-31
ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு

பெப்ரவரி 02 முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த GMOA தீர்மானம்!

2026-01-31

Recent News

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

“எல்டோ தர்மே” என்பவரின் வாள் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் 3 பேர் கைது!

2026-01-31
கணவன்மார்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: பாரிய போராட்டம்!

கணவன்மார்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: பாரிய போராட்டம்!

2026-01-31
டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து தனஞ்சய டி சில்வா நீக்கம்

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து தனஞ்சய டி சில்வா நீக்கம்

2026-01-31
கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

திருகோணமலை , முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

2026-01-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.