அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபாவை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
தம்புத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் இதனைக் கூறினார்.
அரச சேவையில் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்காலத்தில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.