கிழக்கிலங்கையின் மிகப் பழமையான அம்மன் ஆலயங்களுள் ஒன்றான மட்டக்களப்பு தேற்றத்தீவு வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன அஸ்டபந்தன நவகுண்டபக்ஷ பிரதிஸ்டா மகா கும்பாபிஷேகம் நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
தேற்றாத்தீவின் இயற்கை அழகு கொஞ்சும் கடற்கரையில் அமர்ந்து, பக்தர்களுக்கு வேண்டும் வரமளிக்கும் வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் கும்பாபிசேகத்திற்கான பூஜைகள் கடந்த 29ஆம் திகதி ஆரம்பமானது.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் என்ணைக்காப்பு எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவான அடியார்கள் வருகை தந்திருந்தனர்.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ. க.வடிவேல் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியர்களினால் இந்த கும்பாபிசேக கிரியைகள் நடாத்தப்பட்டன. இந்நிலையில் நேற்று காலை விசேட ஹோமபூஜை மற்றும் தீபாராதனைகள் நடைபெற்று மந்திரங்க்ள முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மணிதூபிஇ பிள்ளையார் ஆகிய ஆலயங்கள் அபிசேகம் செய்யப்பட்டதுடன் பிரதான தூபி மற்றும் நாகதம்பிரான் இவீரபத்திரர் இபைரவர் ஆகிய ஆலயங்களுக்கும் அபிசேகம் செய்யப்பட்டன.
இதன்போது பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்தி நாயகியாகவுள்ள வடபத்திரகாளியம்மனுக்கு அபிசேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து விசேட பூஜைகள் நடைபெற்று அடியார்கள் வழிபடும் வகையில் தசமங்கல தரிசனம் செய்யும் வழிபாடும் நடாத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற கும்பாபிசேகத்தினை காண்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவான பக்தர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.