ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மெக்சிகோ, கனடா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் மீது விதித்துள்ள கடுமையான கட்டணங்கள் அமெரிக்கர்களுக்கு “குறுகிய கால” வலியை ஏற்படுத்தக்கூடும் என்று ஞாயிற்றுக்கிழமை (02) தெரிவித்தார்.
ஏனெனில் உலக சந்தைகளில் வரிகள் வளர்ச்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்தலாம் மற்றும் பணவீக்கத்தை மீண்டும் தூண்டலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய வரி விதிப்புகள் குறித்து கனடா மற்றும் மெக்சிகோ தலைவர்களுடன் திங்களன்று பேசுவேன் என்றும் ட்ரம்ப் கூறினார்.
புளோரிடாவில் உள்ள தனது மார்-ஏ-லாகோ தோட்டத்தில் இருந்து வொஷிங்டனுக்குத் திரும்பிய ட்ரம்ப் செய்தியாளர்களிடம் உரையாற்றும் போதே இதனைக் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் கட்டணங்களும் “நிச்சயமாக நடக்கும்” என்று இதன்போது கூறிய டரம்ப், ஆனால் எப்போது என்று சுட்டிக்காட்டவில்லை.
கனடா மற்றும் மெக்சிகோ மீது 25% வரியும், சீனா மீது 10% வரியும் விதிக்கும் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதியின் திட்டம் உலகளாவிய வளர்ச்சியைக் குறைக்கும் மற்றும் அமெரிக்கர்களுக்கு விலையை உயர்த்தும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும் உள்நாட்டுத் தொழில்களை ஊக்குவிக்கவும் அவை தேவை என்று ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.