தமிழகத்தின், ராணிப்பேட்டையில் உள்ள சிப்காட் பொலிஸ் நிலையத்தின் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள் இவ்வாறு பொலிஸ் நிலையத்தின் மீது பெற்றோல் குண்டுகளை வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.