ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய யாழ்ப்பாண விஜயத்தின் போது இலங்கை விமானப்படைக்கு சொந்தமான மூன்று விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுத்து பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜனவரி 31 ஆம் திகதி ஜனாதிபதியின் பயண ஏற்பாடுகள் தொடர்பில் இணையத்தில் பரவிய செய்திகள் முற்றிலும் தவறானவை என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விஜயத்திற்காக விமானப்படையின் விமானங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது உத்தியோகபூர்வ காரில் பயணித்ததாகவும் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.















