லைகா புரடெக்ஷன் தயாரிப்பில் நடிகர் அஜித் குமாரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் விடாமுயற்சி இறுதியாக பெப்ரவரி 6 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இப்படம் தொடர்ந்து அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது இயக்குனர் மகிழ் திருமேனியும் பாக்ஸ் ஆபிஸை ஆள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sacnilk.com அறிக்கையின்படி, விடாமுயற்சி இந்தியாவில் முதல் நாளில் நிகர மதிப்பாக ₹22 கோடி ரூபாயை வசூலித்ததாக கூறப்படுகிறது.
காலைக் காட்சிகளின் வசூல் 58.81% ஆக இருந்த நிலையில், பிற்பகலில் அது 60.27% ஆக அதிகரித்தது. திருச்சி மற்றும் பாண்டிச்சேரியில் அதிகபட்சமாக 92.00% மற்றும் 91.67% ஆகவும், சென்னையில் 88.33% ஆகவும் வசூல் பதிவானது.
இரண்டு வருட இடைவேளைக்கு பின்னர் வெளியான அஜித் குமாரின் இந்த திரைப்படத்தில் அர்ஜுன் சர்ஜா, த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ், விஜய் ரம்யா ஆகியோரும் நடித்துள்ளனர்.
இப்படம் 1997 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கத் திரைப்படமான பிரேக்டவுனைத் தழுவி எடுக்கப்பட்ட ஒரு ஆக்ஷன்-த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அஜித் குமாரின் முந்தைய திரைப்படமான துணிவு, அதன் வெளியீட்டு நாளில் இந்தியாவில் ₹24.4 கோடி ரூபாயை வசூலித்தது.
இருப்பினும், விடாமுயற்சியின் வசூல் வார இறுதி நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.