அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மல்வத்தை பிரதேசத்தில் இன்று (07) வெள்ளிக்கிழமை போதைப் பொருள் ஒழிப்பு சம்மந்தமான விழிப்புணர்வு மற்றும் தெளிவூட்டல் நிகழ்வு சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது, சமூகத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவதனால் எற்படும் தீமைகள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு மற்றும் தெளிவூட்டல் ஏற்படுத்தும் வகையில் சிறு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன், போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் என சந்தேகிக்கப்படும் சிலரின் வீடுகளுக்கும் சென்று பொலிசாரினால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், சம்மாந்துறை பொலிஸார், கிராம உத்தியோகத்தர், கோவில் நிர்வாக உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.