Ne Zha 2 என்ற சீனாவின் அனிமேஷன் திரைப்படமானது தற்சமயம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூல் செய்த திரைப்படமாக அங்கு பெருமை பெற்றுள்ளது.
ஒரு சீன புராணக் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட Ne Zha 2, ஒரு வார கால சந்திர புத்தாண்டு விடுமுறையின் போது 8 பில்லியன் யுவான் ($1.1bn; £910m) அதிகமாக வசூலித்துள்ளது என்று பீஜிங்கின் டிக்கெட் விற்பனை கண்காணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
1950களின் கொரியப் போரைப் பற்றிய கதைக்கருவினை கொண்டு 2024 ஆம் ஆண்டு வெளியான தி பேட்டில் ஆஃப் லேக் சாங்ஜின் திரைப்படத்தின் சாதனையையும் இது முறியடித்துள்ளது.
தி பேட்டில் ஆஃப் லேக் சாங்ஜின் மொத்தமாக சுமார் 900 மில்லியன் அமெரிக்க டொலர்களை வசூலித்திருந்தது.
உள் நாட்டில் Ne Zha 2 திரைப்படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அடுத்த வாரம் அது அமெரிக்கா, கனடா மற்றும் அவுஸ்திரேலியா உட்பட வெளிநாடுகளிலும் வெளியிடப்படவுள்ளன.
திரைப்படம் குறித்து ஒரு பதிவினை இட்டுள்ள IMDB,
இது சீன அனிமேஷனின் எழுச்சிக்குப் பிறகு வலுவான சக்தியைக் காண்பிப்பது மட்டுமல்லாமல், நவீன சூழலில் பாரம்பரிய சீன புராணங்களின் எல்லையற்ற சாத்தியக்கூறுகளையும் நிரூபிக்கிறது என்று குறிப்பிட்டது.
Ne Zha 2 அதன் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளுக்காக பாராட்டப்பட்டது.
இது 2019 ஆம் ஆண்டு வெளியான Ne Zha திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தப் படம் வெளியாகியுள்ளது.
Ne Zha ஆனது $725 மில்லியனுக்கும் அதிகமாக வசூலித்தது மற்றும் சீனாவின் ஐந்தாவது அதிக வசூல் செய்த திரைப்படமாகவும் மாறியது.