கடந்த ஆண்டுகளில் 2000 வாகனங்களை சீசர்கள் (சொத்து சுவீகரிப்பு தொழில் வல்லுநர்கள்) தூக்கினார்கள் என்று பொரளை என் ஆம் பெரேரா மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் போது அகில இலங்கை சொத்து சுவீகரிப்பு தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் செயலாளர் திரு.பிரியந்த லியனகே தெரிவித்தார்.
மேலும் குத்தகைத் தவணை தொடர்பான மக்களின் பிரச்சினைகளுக்கு இயன்றவரை நிவாரணம் வழங்குவதற்கு சங்கமாக முன்வருவதாகத் தெரிவித்த செயலாளர், மக்கள் சிரமமின்றி குத்தகைத் தவணையைச் செலுத்துவதற்கு வாகனங்களையும் ஏனைய சொத்துக்களையும் கொள்வனவு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது செலுத்தப்படாத குத்தகை தவணை உள்ளிட்ட சொத்துக்களை கையகப்படுத்தச் சென்ற போது ஏற்பட்ட மோதலில் தனது தொழில் வல்லுநர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்