லாகூரில் திங்களன்று (10) நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான முத்தரப்பு தொடர் போட்டியின் போது தென்னாப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ பிரீட்ஸ்கே (Matthew Breetzke) ஒருநாள் சர்வதேச அறிமுகத்தில் அதிகபட்ச ஓட்டத்தை பதிவு செய்தார்.
இந்த இன்னிங்ஸில் 148 பந்துகளை எதிர்கொண்ட 26 வயதான ஆரம்ப துடுப்பாட்ட வீரர், 6 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் அடங்கலாக 150 ஓட்டங்களை எடுத்தார்.
1978 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான மேற்கிந்தியத்தீவுகள் அணி வீரர் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் தனது முதல் சர்வதேச இன்னிங்ஸில் 148 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
இந்த நிலையில் அந்த சாதனையை தென்னாப்பிரிக்க நட்சத்திரம் இன்றைய ஆட்டத்தில் முறியடித்தார்.
2010 ஆம் ஆண்டு சிம்பாப்வேக்கு எதிராக 124 ஓட்டங்களை எடுத்திருந்த கொலின் இங்க்ராம், தென்னாப்பிரிக்காவின் ஒருநாள் அரங்கில் அறிமுகமான முதல் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை சாதனையாக இருந்தது.
திங்கட்கிழமை ப்ரீட்ஸ்கேவின் ஆட்டத்தால் தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 304 ஓட்டங்களை எடுத்தது.