சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் (IHRM) ஏற்பாட்டில் தேசிய ரீதியில் மாவட்ட பணிப்பாளர்கள்,
அங்கத்தவர்களுக்கான அடையாள அட்டை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் கெளரவிப்பு விழா (08) கொழும்பு செரண்டிப் கிரேன்ட் மண்டபத்தில் அமைப்பின் தேசியத் தலைவர் துவான் ரிஸ்வான் காசீம் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கெளரவ அதிதிகளாக பொலிஸ் துறை, பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகள், சர்வமத தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் அமைப்பின் அம்பாறை, கொழும்பு, கம்பஹா, கண்டி உட்பட பல மாவங்களைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
இங்கு அமைப்பின் உயர்பீட உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.