இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், கவனயீனமாக வாகனம் செலுத்தியதால் ஏற்பட்ட வீதி விபத்துகளில் 203 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனவரி 1 முதல் பெப்ரவரி 7 வரை இடம்பெற்ற வீதி விபத்துகளில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், 2025 ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 7 ஆம் திகதி வரை 194 கோர வீதி விபத்துக்களும் 514 கடுமையான வீதி விபத்துக்களும் மற்றும் 880 சிறியளவிலான வீதி விபத்துக்களும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.