காதலர் வாரத்தின் ஐந்தாவது நாளில் கொண்டாடப்படும் வாக்குறுதி நாள் (பிராமிஸ் டே), தம்பதிகள் ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருப்பதற்கும், எந்தவொரு சூழ்நிலையிலும் ஒருவருக்கொருவர் ஆதரவாக நிற்பதற்கும் உறுதியளிக்கும் நாளாகும். இன்று ப்ரோமிஸ் டே.
நீங்கள் ஒரு தீவிர உறவில் இருந்து, உங்கள் பிணைப்பை வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஒன்றாக மாற்ற விரும்பினால், இந்த ஐந்து வாக்குறுதிகளை உங்கள் இணையிடம் அளிப்பது உங்கள் உறவில் ஒரு திருப்புமுனையாக இருக்கும்.
முதல் வாக்குறுதி: தம்பதிகளுக்கு இடையில் இருக்கும் உறவில், ஒருவருக்கொருவர் மகிழ்ச்சிக்கு பொறுப்பேற்று ஒருவருக்கொருவர் தங்கள் கடமைகளை நிறைவேற்றும்போது, அவர்களின் பிணைப்பு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். உங்கள் இணையின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டுவர நீங்கள் எப்போதும் முழுமனதாக முயற்சி செய்வீர்கள் என்றும், அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வீர்கள் என்றும் உறுதியளிக்கவும்.
இரண்டாவது வாக்குறுதி: இந்த நாளில் உங்கள் இணைக்கு அளிக்க வேண்டிய மற்றொரு வாக்குறுதி என்னவென்றால், நீங்கள் அவர்களை ஒருபோதும் எனக்கு ஏற்றார்ப் போல் மாற்றிக்கொள்ள வற்புறுத்த மாட்டீர்கள், அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். பெரும்பாலும், மக்கள் தங்கள் துணையை தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப வடிவமைக்க முயற்சி செய்கிறார்கள். இப்படிச் செய்வது ஒரு உறவில் பிரச்சனையையும் இருவருக்கும் இடையே இடைவெளியையும் ஏற்படுத்தும்.
மூன்றாவது வாக்குறுதி: எந்தவொரு சூழ்நிலையிலும் அவர்களுக்கு முழுமையான ஆதரவளிப்பதாக உறுதியளிக்கவும். நீங்கள் எப்போதும் ஒரு குழுவாகச் செயல்படுங்கள். அவர்களை ஒருபோதும் தனிமையாக உணர விடாதீர்கள். எப்போதும் அவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்.
நான்காவது வாக்குறுதி: நீங்கள் எப்போதும் உங்கள் இணையின் சுதந்திரத்தை மதிப்பீர்கள் என்றும், அவர்கள் சொந்தமாக முடிவுகளை எடுக்க ஊக்குவிப்பீர்கள் என்றும் உறுதியளிக்கவும். உங்கள் துணைக்கு கனவுகளும் அபிலாஷைகளும் இருந்தால், அவர்களின் இலக்குகளை அடைவதில் நீங்கள் அவர்களுக்கு உதவியாகவும் ஆதரவாகவும் இருப்பேன் என வாக்குறுதி கொடுங்கள்.
ஐந்தாவது வாக்குறுதி: உங்கள் துணை தான் எப்போதும் உங்கள் முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டும். என்ன நடந்தாலும் பரவாயில்லை, அவர்களுடன் உங்கள் வாழ்க்கையை முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் வாழ்வதாக உறுதியளிக்கவும். எந்த சூழ்நிலையிலும் நீங்கள் அவர்களை சந்தேகிக்க மாட்டீர்கள். அல்லது அவர்கள் உங்களை சந்தேகிக்க ஒரு காரணத்தையும் கொடுக்க மாட்டீர்கள் என்ற வாக்குறுதியை கொடுங்கள்.