நுவரெலியா பூண்டுலோயா பகுதியை சேர்ந்த துரைசாமி விஜின் இந்தியாவில் 2025 ம் ஆண்டுக்கான அகில இந்திய மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்டு மூன்று தங்க பதக்கதை வென்றுள்ளார் .
இந்த போட்டியானது இந்தியா ராஜஸ்தான் RR கல்லூரி விளையாட்டு மைதானதில் நடைபெற்றது . இவர் சுற்றி எறிதல் ,பருதிவட்டம் எறிதல் மற்றும் 5000 M வேக நடை ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு மூன்று தங்கபதக்கதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
அவர் தெரிவிக்கையில் இந்த மெய் வல்லுனர் போட்டியில் குறிப்பாக இந்தியாவில் இருந்து 12 மாநிலங்களும் பூட்டான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளை சேர்ந்த 2000கும் அதிகமான வீர வீராங்கனைகள் கலந்து கொண்டு இருந்ததாக ஆதவன் செய்தி பிரிவினருக்கு தெரிவித்தார் .
அவர் இந்த சந்தோஷ தருணத்தில் அவரின் தாய் தந்தையருக்கும் இந்த அருமையான வாய்பை அளித்த இலங்கை நாட்டிற்கும் அவரது பயிற்றுவிப்பாளர்களுக்கும் அவருக்கு அனுசரணை வழங்கிய பிரதான அனுசரணையாளர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்தார்.
மேலும் அவர் உலக ரீதியில் நடைபெறும் மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை இலங்கைக்கு பெற்றுக்கொடுக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார் . அதுமட்டும் அன்றி விவாடி அகில இந்திய மருத்துவ சங்கதினாரால் சிறப்பு விருதும் வழங்கி கௌரவிக்கபட்டார் .
திறமையானவர்களுக்கு எங்கு சென்றாலும் சிறப்பு இடம் இருப்பதாக இந்த தருணதில் உணர்வதாக தெரிவித்த அவர் அவரை போன்று இன்னும் பல வீர வீராங்கனைகள் வெற்றிகளை குவிக்க வேண்டும் என்றும் ஒலிம்பிக் வரை செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.