கடுவலை போம்பிரிய பகுதியில் அமைந்துள்ள போம்பிரிய மத்திய கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்த கும்பலொன்று, குறித்த பாடசாலையில் இல்ல விளையாட்டுப் போட்டிக்காக பயிற்சியில் இருந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவமொன்றும் பதிவாகியுள்ளது.
தடிகளாலும், பூச்சாடிகளைக் கொண்டும் தாக்குதல் நடத்தப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் 11 மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில், நவகமுவ பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த மாணவர்கள் அவர்களது பெற்றோரால் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தாக்குதலை நடத்தியது குறித்த பாடசாலையின் பழைய மாணவர்கள் என்றும் இதில் ஒருவர் இராணுவத்திலிருந்து தப்பித்தவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், நவகமுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.