இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் வொஷிங்டன் பயணத்தின் போது, புதிதாக நிறுவப்பட்ட அரசாங்கத் திறன் துறைக்கு (DOGE) தலைமை தாங்கும் சிறப்பு அமெரிக்க அரசாங்க அதிகாரியாக நியமிக்கப்பட்ட எலோன் மஸ்க்கை வியாழக்கிழமை (13) சந்தித்தார்.
வொஷிங்டனில் அமைந்துள்ள பிளேர் ஹவுஸில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி தனது குழந்தைகளுடன் மோடியை சந்தித்தார்.
சந்திப்பு குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள மோடி,
“இந்தியாவின் சீர்திருத்த முயற்சிகள் மற்றும் ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி’ பற்றி தொழில்நுட்ப பில்லியனருடன் விவாதித்ததாக பதிவிட்டார்.
அத்துடன், விண்வெளி, இயக்கம், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் போன்ற பல்வேறு விடயங்களைப் பற்றி நாங்கள் விவாதித்தோம் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
சந்திப்பு குறித்த மற்றொரு எக்ஸ் பதிவில் மோடி,
எலோன் மஸ்க்கின் குழந்தைகளுடன் தனது புதுமையான தருணங்களின் காட்சிகளைப் பகிர்ந்து கொண்டார், அதில், பில்லியனரின் குடும்பத்தைச் சந்தித்ததும், பலதரப்பட்ட விடயங்களைப் பற்றிப் பேசுவதும் மகிழ்ச்சியாக இருந்தது – என்று பதவிட்டார்.
டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு மீண்டும் திரும்பிய பின்னர் தனது முதல் அமெரிக்க பயணமாக பிரதமர் மோடி வியாழன் அதிகாலை வொஷிங்டன் டிசியை சென்றடைந்தார்.
மோடியின் அமெரிக்க விஜயம் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.