திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக வெள்ளிக்கிழமை (14) பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
2025 மகா கும்பமேளா நிகழ்வு தொடங்கியதில் இருந்து 491.4 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் (கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதியின் சங்கமம்) நீராடியுள்ளதாக உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றிரவு 8 மணி நிலவரப்படி, கிட்டத்தட்ட 8.54 மில்லியன் மக்கள் வியாழக்கிழமை மாத்திரம் புனித நீராடியுள்ளனர் என்று உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் தகவல் துறை சுட்டிக்கட்டியுள்ளது.
கடந்த ஜனவரி மாத பெளர்ணமியில் தொடங்கிய மகா கும்பமேளா நிகழ்வு உலகெங்கிலும் உள்ள பக்தர்களை ஈர்க்கும் மிகப்பெரிய ஆன்மீக மற்றும் கலாச்சார விடயமாக பார்க்கப்படுகிறது.
பிரமாண்டமான நிகழ்வு பெப்ரவரி 26 ஆம் திகதி மகாசிவராத்திரி வரை தொடரும்.