கனடாவின் ரொறன்ரோ பகுதியில் கடந்த சில நாட்களாகக் காணப்படும் கடுமையானப் பனிப்பொழிவு காரணமாக அங்குள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் ரொறன்ரோ, பீல் ஹால்டன், யோர்க், டர்ஹம், ஹமில்டன் ,நயகரா,மோன் அவனியர், மற்றும் சிம்கோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்கலைக்கழகங்களும் மூடப்படுவதாகவும், பாடசாலை போக்குவரத்து சேவைகள் இரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடுமையான பனிப்பொழிவு காரணமாக அப்பகுதியில் பல்வேறு வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் எனவே வாகனங்களை மெதுவாக செலுத்துமாறு பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.