அவுஸ்திரேலிய அணியுடன் தற்சமயம் நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை நட்சத்திரம் குசல் மெண்டீஸ் சதம் விளாசியுள்ளார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்யும் ஐந்தாவது சதம் இதுவாகும்.
இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 115 பந்துகளை எதிர்கொண்ட அவர் 11 பவுண்டரிகள் அடங்கலாக 101 ஓட்டங்களை பெற்று அடம் ஷாம்பாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
சற்று முன்னர் வரை இலங்கை அணி 45 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு 223 ஓட்டங்களை பெற்றுள்ளது.