பிரான்ஸின் கிரனோபல் நகரில் ஏராளமானவா்கள் குழுமியிருந்த மதுபான விடுதியில் மர்ம நபரொருவர் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது, தாக்குதல் நடத்திய நபரிடம் இயந்திரத் துப்பாக்கி இருந்துள்ளதாகவும், ஆனால் அவர் அதனைப் பயன்படுத்தாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும், அவர்களில் இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இத்தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த தாக்குதல் பயங்கரவாதத் தாக்குதலாக இருக்காது எனவும், சட்டவிரேத கும்பல்களுக்கு இடையிலான மோதலாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ள பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.