தெல்லிப்பழை வைத்தியசாலை புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கான கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கான Palliative Care கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்றைய தினம் இடம்பெற்றது.
இக்கட்டடத்திற்கான அடிக்கல்லினை வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் நாட்டிவைத்தார். சுமார் 30 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த கட்டடம் அமைக்கப்படவுள்ளதாகவும், இதற்கான நிதிப் பங்களிப்பை வன்னி கோப் எனும் நிறுவனம் வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.