யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக இடம்பெற்று வரும் பண மோசடி விசாரணை தொடர்பில் டெய்சி பாரஸ்டிற்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
டெய்சி பாரஸ்டிற்கு எதிராக கடுவலை நீதிவான் உத்தரவுக்கு அமைவாக எதுவித பயணத்தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என சட்டத்தரணி பிரேமநாத் டோலவத்த ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
நீதிமன்றத்தால் உத்தரவிடப்படாத தகவல்களை வெளியிட்டதன் மூலம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குற்றமிழைத்துள்ளதாகவும் பிரேமநாத் டோலவத்த குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த நிலையில், சனிக்கிழமை (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், தான் உண்மைகளை கூறியதாகவும், டெய்சி பாரஸ்டுக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடை பெறப்பட்டதை உறுதிப்படுத்தியதாகவும் கூறினார்.