2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் (Morne Morkel) தனது தந்தையின் மரணம் காரணமாக துபாயில் இருந்து நாடு திரும்பினார்.
பெப்ரவரி 15 அன்று இந்திய அணியின் ஏனைய உறுப்பினர்களுடன் துபாய் சென்றடைந்த மோர்கல், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல பயிற்சி அமர்வுகளின் ஒரு பகுதியாக இருந்தார்.
மோர்கெல் தனது தந்தை ஆல்பர்ட்ஸின் மறைவுச் செய்தியைப் பெற்ற பிறகு, பெப்ரவரி 17 திங்களன்று தென்னாப்பிரிக்காவிற்குப் புறப்பட்டார்.
இதனால், திங்களன்று நடந்த அணியின் பயிற்சி அமர்வில் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து நட்சத்திரம் பங்கெடுக்கவில்லை.
அறிக்கைகளின் படி, அவர் மீண்டும் சாம்பியன்ஸ் டிராபிக்கு திரும்பும் திகதி இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை.
மேலும், அவர் இல்லாதது சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் இந்திய அணியின் நம்பிக்கையை பாதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தியா தனது 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஆட்டங்களை பெப்ரவரி 20 அன்று பங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்துடன் தொடங்க உள்ளது.