இலங்கையில் எரிபொருள் மீதான வரியை அரசாங்கம் நிச்சயமாக குறைக்கும் என அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார்.
அத்துடன், இது தொடர்பான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், எரிபொருள் வரி தொடர்பான விரிவான அறிக்கை விரைவில் சபையில் சமர்ப்பிக்கப்படும்.
ஏற்கனவே உள்ள 50 ரூபா எரிபொருள் வரியை குறைப்பதாக அரசாங்கம் முன்னர் வழங்கிய வாக்குறுதி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தைக் கூறினார்.