காலத்தால் தீர்க்க முடியாத பிரச்சனைகள் கூட காலபைரவரை வழிபட்டால் விலகி விடும்.
காலாஷ்டமி என பக்தர்களால் போற்றப்படும் நாள் தெய்வீக ஆற்றல் நிறைந்த ஒரு நாளாகும்.
இது காலத்தின் கடவுளாக போற்றப்படும் கால பைரவருக்குரிய மிக முக்கியமான வழிபாட்டு நாளாகும்.
ஒவ்வொரு மாதமும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமிகள் இரண்டுமே பைரவருக்கு உரிய வழிபாட்டு நாள் என்றாலும், தேய்பிறை அஷ்டமி திதியில் மிக விசேஷமான நாளாக கருதப்படுகிறது.
இந்த நாளில் கால பைரவரை விரதம் இருந்து வழிபடுவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளார்கள். கால பைரவர், தனது பக்தர்களை அனைத்து தீமைகளிலிருந்தும் காக்கும் மகா சக்திவாய்ந்த தெய்வமாக போற்றப்படுகிறார்.
இதனால் தங்களின் துன்பங்கள் நீங்க தேய்பிறை அஷ்டமியில் கால பைரவரை பக்தர்கள் வழிபடுகிறார்கள்.
தேய்பிறை அஷ்டமியில் கால பைரவரை வழிபடுவதால் எதிரிகள் தொல்லை நீங்கும், கடன் பிரச்சனைகள், வழக்கு உள்ளிட்ட மீள முடியாத சிக்கல்கள் நீங்குவதுடன் செல்வ செழிப்பு, மகிழ்ச்சி, நிம்மதி ஆகியவையும் கிடைக்க அருள் செய்கிறார்கள்.
பயம், குழப்பம், எதிர்மறை ஆற்றல்களின் தாக்கம் ஆகியவை குறையும். பெப்ரவரி மாத தேய்பிறை அஷ்டமி பெப்ரவரி 20 ஆம் தேதியான இன்று அமைகிறது.
இது மாசி மாத தேய்பிறை அஷ்டமி என்பதால் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது.