அவுஸ்திரேய நட்சத்திரம் பேட் கம்மின்ஸ் 2025 இந்தியன் பிரீமியர் லீக்கின் போது கணுக்கால் காயத்திலிருந்து திரும்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
மேலும், அவுஸ்திரேலியாவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தலைவர் பதவியை மீண்டும் பெறத் தகுதி அடைவதாகவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சிட்னியில் நடந்த இந்தியாவுக்கு எதிரான இறுதி போர்டர்-கவாஸ்கர் கிண்ண போட்டியில், அவுஸ்திரேலியாவின் வியத்தகு இறுதி நாள் வெற்றியைத் தொடர்ந்து, இடது கணுக்காலில் ஏற்பட்டிருந்த நீண்ட காலப் பிரச்சினையால் மீண்டும் வலியை எதிர்கொண்டார்.
காயம் அவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இலங்கை சுற்றுப்பயணத்தில் இருந்து விலக்கியது.
இதனால், அவர் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் இருந்தும் வெளியேறினார்.
எவ்வாறெனினும், தற்சமயம் குணமடைந்து வரும் 31 வயதான வீரர், அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள 2025 ஐ.பி.எல். தொடரின் போது கடந்த சீசனின் இரண்டாம் இடத்தைப் பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உடனான தனது 18 கோடி இந்திய ரூபா ஒப்பந்தத்தை நிறைவேற்ற சரியான நேரத்தில் தகுதியடைவார் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கிரிக்கெட் உலகில் அதிக இலாபம் தரும் போட்டியின் அதிக-தீவிர தன்மை, ஜூன் 11 அன்று லொர்ட்ஸில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு சிறந்த ஆயத்தத்தை வழங்கும் என்று கம்மின்ஸ் நம்புகிறார்.
அதைத் தொடர்ந்து ஜூலை மாதம் கரீபியனில் மூன்று டெஸ்ட் சுற்றுப்பயணத்தை அவுஸ்திரேலியா மேற்கொள்ளும்.