உலகின் முன்னணி புதிய ஆற்றல் வாகனமான BYD (New Energy Vehicle) இலங்கையில் தமது கார்களின் விலை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் BYD பயணிகள் வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keels CG Auto ஆனது, Plug-in Hybrid BYD SEALION 6 DM – i இன் அறிமுகத்துடன் கொழும்பில் BYD காட்சியறை மற்றும் சேவை மத்திய நிலையத்தை கடந்த வருடம் திறந்து வைத்தது.
கொழும்பு 02, யூனியன் பிளேஸ், இல 447 இல் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான காட்சியறையின் திறப்பு நிகழ்வானது 2024 ஆகஸ்டம் மாதம் நடைபெற்றது.
இந்த நிலையில், BYD ஸ்ரீலங்கா அவர்களின் மின்சார வாகனங்கள் (EV) மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் மின்சார வாகனங்கள் (PHEV) ஆகியவற்றுக்கான சிறப்பு விலைகளை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு வாகனத்திற்கும் 8 வருட உற்பத்தியாளர் பேட்டரி உத்தரவாதமும் 6 வருட உற்பத்தியாளர் வாகன உத்தரவாதமும் வழங்கப்படுகிறது.
குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் இந்த சிறப்பு சலுகை விலைகளுக்கு வாடிக்கையாளர்கள் புத்தம் புதிய BYD வாகனங்களை முன்கூட்டிய முன்கட்டளை (ஆர்டர்) செய்யலாம்.
BYD SEALION 6 SUPERIOR – 21.7 மில்லியன் ரூபா
BYD SEALION 6 PREMIUM – 25.3 மில்லியன் ரூபா
BYD SEAL DYNAMIC – 19.7 மில்லியன் ரூபா
BYD SEAL PREMIUM – 54.7 மில்லியன் ரூபா
BYD SEAL PERFORMANCE – 78.1 மில்லியன் ரூபா
BYD ATTO 3 ADVANCED – 14.6 மில்லியன் ரூபா
BYD ATTO 3 SUPERIOR – 16.8 மில்லியன் ரூபா
BYD M6 STANDARD – 16.2 மில்லியன் ரூபா
BYD M6 SUPERIOR – 17.4 மில்லியன் ரூபா
BYD DOLPHIN DYNAMIC 49 – 10.7 மில்லியன் ரூபா