பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தின் சசாரம் பகுதியில் இரு குழுக்களிடையே வெள்ளிக்கிழமை (21) ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
இந்த வன்முறையில் மேலும் இரு மாணவர்கள் காயமடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பரீட்சை நிலையத்தில் மோசடி செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டதால் தகராறு ஏற்பட்டது.
மோதல் வன்முறையாக மாறியதால், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 16 வயது அமித் குமார் என்ற தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவர் உயிரழந்துள்ளார்.
PTI செய்திச் சேவையின் தகவல்களுக்கு அமைவாக, பரீட்சை நிலையத்தில் இடம்பெற்ற மோசடி சம்பவம் தொடர்பாக மாணவர்கள் குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மாணவரின் மரணம் காரணமாக, இறந்தவரின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் நீதி கேட்டு தேஹ்ரியில் தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும், அதிகாரிகள் தலையிட்டு, இந்த வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இறுதியில் போராட்டக்காரர்கள் சமாதானம் செய்யப்பட்டு, குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளில் ஈடுபட்டனர்.