4 நாடுகளின் நேருக்கு நேர் சாம்பியன்ஷிப் போட்டியில் கனடா அணி 3-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை தோற்கடித்து சம்பியன்ஷிப் பட்டம் வென்றது.
கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான புகழ்பெற்ற ஹொக்கி போட்டியானது பதட்டமான சர்வதேச உறவுகளின் விரிசல்களுக்கு மத்தியில் தூண்டப்பட்ட நிலையில் நடைபெற்றது.
அதனால், இந்தப் போட்டியானது விளையாட்டின் பெருமைக்கு அப்பாற்பட்ட முக்கியத்துவத்தைப் பெற்றதாகத் தோன்றியது.
இரு நாடுகளின் ரசிகர்களும் ஆர்வத்துடனும், மிகுந்த தேசப்பற்றுடனும் போட்டியை கண்டு உணர்ச்சிவசப்பட்டனர்.
போட்டியானது வியாழன் (20) இரவு மாசசூசெட்ஸின் பாஸ்டனில் உள்ள ரி.டி. கார்டன் அரங்கத்தில் நடைபெற்றது.
கனடாவின் கானர் மெக்டேவிட் கனடாவுக்காக அதிக நேரத்தில் ஆட்டத்தை வென்ற கோலை அடித்தார்.
இறுதியாக கனடா 3-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி சம்பியன் ஆனது.