கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், தற்போது சம்பவம் தொடர்பான மேலும் பல தகவல்களை வௌியிட்டுள்ளனர்.
அதன்படி, துப்பாக்கிதாரியும், அவருக்கு உடந்தையாக இருந்த பெண்ணும் கடுவெல பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இருந்து இந்தக் கொலையைச் செய்ய வந்திருப்பது தெரியவந்துள்ளது.
குறித்த விடுதியில் இருந்து புதுக்கடை நீதவான் நீதிமன்றிற்கு வருவதற்காக பயன்படுத்தப்பட்ட கம்பஹா, மல்வத்து, ஹிரிபிட்டிய பகுதியில் இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனத்தையும் கொழும்பு குற்றப்பிரிவு பறிமுதல் செய்துள்ளது.
இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் உடல், கொழும்பு பொலிஸ் பிரேத அறையில் நேற்று(20) பிற்பகல் பிரேத பரிசோதனை இடம்பெற்ற நிலையில், அவரது மூத்த சகோதரி உடலைப் பெற வந்திருந்தார்.
இதனை அடுத்து கணேமுல்ல சஞ்சீவவின் சடலம் நேற்று (20) பிற்பகல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலைக்கு கொண்டு வரப்பட்டது.