நியூசிலாந்தில் ஒரே இரவில் நடந்ததாக சந்தேகிக்கப்படும் தீ வைப்புத் தாக்குதலில் குறைந்தது ஏழு தேவாலயங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன.
இந்த தாக்குதலின் போது, தலைநகர் வெலிங்டனுக்கு வடக்கே உள்ள மாஸ்டர்டன் நகரத்தில் உள்ள நான்கு தேவாலயங்கள் மிதமான சேதத்தை சந்தித்ததாக நியூஸிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில், மேலும் மூன்று தேவாலயக் கட்டிடங்கள் விசமிகளால் தாக்கப்பட்டுள்ளன.
எனினும் அவை தீப்பிடிக்கவில்லை என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
வைரராபா பகுதி முழுவதும் உள்ள மீட்பு குழுவினர் சனிக்கிழமை அந்நாட்டு நேரப்படி மாலை 04:30 மணிக்கு தீயை அணைத்துள்ளனர்.
எபிபானியின் ஆங்கிலிகன் தேவாலயம், செயின்ட் பாட்ரிக் கத்தோலிக்க தேவாலயம் மாஸ்டர்டன், மாஸ்டர்டன் பாப்டிஸ்ட் தேவாலயம் மற்றும் எக்விப்பர்ஸ் சர்ச் மாஸ்டர்டன் ஆகியவை தீக்கிரையாக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நியூசிலாந்தில் உள்ள மத கட்டிடங்கள் சமீப வருடங்களில் தீவைப்பு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு, ஆக்லாந்தில் உள்ள ஒரு தேவாலயத்தின் சொத்து ஒரே இரவில் இரண்டு தீ தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டது.
நவம்பர் மாதம் இதே பகுதியில் ஒரு மசூதி தீ வைத்து எரிக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டில், கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள மசூதிகளில் நடந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.