2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் செவ்வாய்க்கிழமை (25) நடைபெறும் குழு பி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளவுள்ளது.
அதன்படி, இந்த ஆட்டமானது இலங்கை நேரப்படி பிற்பகல் 02.30 மணிக்கு ராவல்பிண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகும்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்குப் பின்னர் தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்கான எதிர்பார்ப்புடன் இந்த ஆட்டத்தில் களம் காணுகின்றது.
அதேநேரத்தில், தனது தொடக்க ஆட்டத்தில் அவுஸ்திரேலியா சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இங்கிலாந்தை வீழ்த்தி அதிக வெற்றிகரமான ரன் சேஸை முடித்தது.
முதல் போட்டிகளில் இரு அணிகளும் உறுதியான வெற்றிகளைப் பெற்றுள்ளன.
மேலும், இந்த ஆட்டத்தில் வெற்றி கொள்ளும் அணி குழு பி இல் இருந்து அரையிறுதிக்கு முன்னேறும்.
குழு ஏ இல் இருந்து முன்னதாகவே இந்தியா, நியூஸிலாந்து அணிகள் அரையிறுதிக்கு நுழைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.