பொலன்னறுவை, கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இருந்த நான்கு கைதிகள் இன்று அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்
தப்பிச் சென்றவர்கள் 29 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் காலி பொத்தல, அக்மீன மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் வெலிகந்த பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர் .
இதேவேளை உணவுப் பற்றாக்குறை மற்றும் போதிய வசதிகள் இல்லாததால் படையினருடன் மோதலில் ஈடுபட்ட பின்னர் கண்டகாடு மறுவாழ்வு மையத்திலிருந்து கைதிகள் தப்பிச் சென்றதாக இதற்கு முன்னர் பல தகவல்கள் வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.