ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மூன்று விமானங்கள் பல வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்த போதிலும், மாதாந்தம் 9 இலட்சம் டொலர்களை தவணை முறையில் செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும இன்று (25) நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டார்.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான மொத்த விமானங்களின் எண்ணிக்கை 22 ஆகும்.
பிரதான விமான சேவையில் தற்போது 3,194 ஊழியர்களும், மூலோபாய வணிக பிரிவுகளில் 2,862 ஊழியர்களும் பணிபுரிகின்றனர்.
விமான சேவையை வலுப்படுத்தும் நோக்கில் 2025 ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாது.
அதன்படி, இந்த 5 ஆண்டுகளில் விமான நிறுவனத்தின் செயல்பாட்டு இலாபம் மற்றும் அரசாங்க ஒத்துழைப்பு ஆகியவை எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.