ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூலமான அரசு பாடசாலைகளுக்கும் எதிர்வரும் பெப்ரவரி 27 (வியாழக்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி 26 ஆம் திகதி மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த மாகாண கல்விச் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு வியாழக்கிழமை (27) விடுமுறை வழங்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.
கடந்த வாரம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட கிழக்கு மாகாண ஆளுநர், விடுமுறை வழங்கப்பட்ட நாளுக்கான கல்விச் செயற்பாடுகள் 2025 மார்ச் 01 ஆம் திகதி நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதேநேரம், வட மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூலமான அரச பாடசாலைகளுக்கும் வியாழக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.