ஹிக்கடுவ நரிகம கடற்கரையில் நீரில் மூழ்கிய 13 வயதான ரஷ்ய சிறுமி ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (26) இடம்பெற்றுள்ளது.
குறித்த கடற்கரைப் பகுதியில் நீராடிய போது சிறுமி, பலத்த நீரோட்டத்தினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதையடுத்து விரைந்து செயற்பட்ட ஹிக்கடுவ பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் உயிர்காப்பாளர்களால் சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் அத்தியட்சகர் தேசப்பிரிய, பொலிஸ் கான்ஸ்டபிள்களான துமிந்த, கனிஷ்க, குமார, திஸாநாயக்க மற்றும் ஜெயசிங்க ஆகியோரே மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் ஆவர்.
சிறுமி மீட்கப்பட்டதை அடுத்து முதற்கட்ட மருத்துவ உதவியும் வழங்கப்பட்டது.