2025ம் ஆண்டுக்கான 97வது ஒஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விருது விழாவை நகைச்சுவை நடிகர் கேனன் ஓ பிரைன் தொகுத்து வழங்கினார்.
இதில் சிறந்த திரைக்கதை, படத்தொகுப்பு, இயக்குநர், நடிகை, திரைப்படம் என மொத்தமாக 5 விருதுகளை அனோரா திரைப்படம் குவித்துள்ளது.

இப்படத்திற்காக சிறந்த இயக்குநர், திரைக்கதை, படத்தொகுப்பு, சிறந்த படம் என 4 பிரிவுகளில் இயக்குநர் ஷான் பேகர் ஒஸ்கர் விருதுகளை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஒரே படத்திற்காக 4 விருதுகளை வென்ற முதல் நபர் என்ற சாதனையையும் ஷான் பேகர் பெற்றுள்ளார்.
மேலும் அனோரா படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை மைக்கி மேடிசனும், ‘தி ஃப்ரூடலிஸ்ட்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை ஏட்ரியன் ப்ரோடியுன் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
