அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் கடந்த 21 ஆம் திகதி வெளியான ட்ராகன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றது.
ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், லியோன் ஜேம்ஸின் இசையமைப்பில் உருவான இத் திரைப்படத்தில் கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோகர் ஆகியோர் நடித்திருந்தனர்.
மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோரும் நடித்திருந்தனர்.
இத் திரைப்படம் கடந்த 21ம் திகதி வெளியாகியிருந்த நிலையில் இன்று வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படம் வெளிவந்து 10 நாட்களில் சுமார் ரூ100 கோடி இந்திய ரூபாவினை வசூல் செய்திருப்பதாக அத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் 100 கோடி வசூலைக் கொண்டாடும் விதமாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.