ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான ‘குடு ரொஷானின்’ மனைவிக்கு ஆயுள்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தாயான 36 வயதுடைய விஜேசிங்க ஆராச்சிலாகே நிரோஷா என்ற பெண்ணுக்கே இத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி பொலிஸார் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த பெண் பெருந்தொகையான போதைப் பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.