சுற்றுலாப் பயணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்ட யால தேசிய பூங்காவில் வரையறுக்கப்பட்ட அளவு வீதிகள் இன்று (05) முதல் திறக்கப்படும் என வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 2.00 மணி முதல் குறித்த வீதிகள் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படவுள்ளதாக திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழையினால் யால தேசிய பூங்காவின் வீதி அமைப்பில் ஏற்பட்டுள்ள சேதத்தை குறைப்பதற்கும் அதன் மூலம் அதன் சுற்றாடல் அமைப்பிற்கு ஏற்பட்ட பாதிப்பை குறைப்பதற்கும் யால தேசிய பூங்காவை மார்ச் 01 ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.