இலங்கை கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து யாழ்ப்பாணம் கிளிநொச்சி வத்திராயன் கடற்கரைப் பகுதியில் நேற்று (04) மேற்கொண்ட விசேட தேடுதலின் போது 174 கிலோ கிராம் கேரள கஞ்சா தொகையானது கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இந்த கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி 69 மில்லியன் ரூபாவை விட அதிகமானது என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த கேரள கஞ்சா தொகையானது மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸ் விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதேநேரம், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.