இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தேசிய ஊடகக் கொள்கையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் குழுநிலை விவாதத்தின் போது பேசிய அமைச்சர், பாடசாலை மாணவர்கள் உட்பட மக்களுக்கு ஊடக நெறிமுறைகள் குறித்து கல்வி கற்பிப்பதற்கான ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.
மேலும், தொலைக்காட்சியின் டிஜிட்டல் மயமாக்கலும் விரைவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.