கொழும்பு, ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் ரிவால்வர் மற்றும் 4 தோட்டாக்களுடன் 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (07) நடத்தப்பட்ட சோதனையின் போது அந்த இளைஞரிடம் 102 கிராம் ஹெராயின் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கொழும்பு 15 இல் உள்ள முத்துவெல்ல மாவத்தையில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.